உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? : உயர்நீதிமன்றம்

181

உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தேர்தலில் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தேர்தலை மே மாதத்திற்குள் நடத்தி முடிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபற்றி மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.