நீதிமன்ற புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

294

சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற கோரி, தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இந்த கூட்டமைப்பின் சிறப்பு மாநில செயற்குழுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு முறை ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர்களை சந்தித்து, வழக்கறிஞர்களுக்கான சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியதாக கூறினார். இது தொடர்பாக ஆய்வு செய்து முடிவு எடுப்பதாக தலைமை நீதிபதி கூறியதை அடுத்து, தங்களது நீதிமன்ற புறக்கணிப்பை தற்காலிகமாக ஒத்திவைத்து உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்