3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் புத்தகம் பறிமுதல் செய்யப்படும் – உயர்நீதிமன்றம்

361

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் புத்தகம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில், மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புருஷோத்தமன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2-ம் வகுப்பு வரை மொழிப்பாடம், கணிதம் மட்டுமே கற்று கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் மொழிப்பாடம், கணிதம் இவற்றோடு சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களை மட்டுமே கற்று கொடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் புத்தகம் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்துள்ளார்.