மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக் தடை – சென்னை உயர்நீதிமன்றம்

139

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு வீட்டு பாடம் வழங்குவதற்கு தடை விதிக்கும் வகையில், புருஷோத்தமன் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தநிலையில், நீதிபதி கிருபாகரன் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை மீறும் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தேவையில்லாத பாடங்களை மாணவர்களுக்கு நடத்த கூடாது என்றும், மாணவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத கல்வியை தர வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.