ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு | ஜீன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

229

ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டு, ஆலையை திறக்க உத்தரவிடக்கூடாது என தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆலையை பராமரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் எனவும், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை பராமரிக்க ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு முடியும் வரை ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜீன் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.