173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..!

370

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான 173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22ம் தேதி ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மொத்தம் 243 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதலில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கை தவிற மற்ற 242 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி பஷீர் அகமது, செல்வம் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.