மருத்துவ படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடரும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு..!

316

மருத்துவ படிப்பில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடரும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுப்பிரிவு மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2018- 2019ஆம் கல்வியாண்டில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 69 சதவீத இடஒதுக்கீடு தொடரும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டடனர். 1994ம் ஆண்டு தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி, 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.