ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராய்ன் போதைப் பொருள் பறிமுதல்..!

638

அரியானாவில் 5 கோடி மதிப்புள்ள ஹெராய்ன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியானா மாநிலம், குருகிராமம் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இரண்டு நைஜீரிய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மறைத்து வைத்திருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ எடையுடைய ஹெராய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், தென் ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட போதைப் பொருளை, டெல்லி, குருகிராமம், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விற்பனை செய்ய வந்ததாக நைஜீரிய இளைஞர்கள் தெரிவித்தனர்.