பிரான்ஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

243

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நடைபெற்ற வாணவேடிக்கை பார்வையாளர்களுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பிரெஞ்சு முடியாட்சியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சியாளர்கள் பாஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் திரண்டு சென்று 1789ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் நாள் பாஸ்டில் சிறையைத் தகர்த்துப் புரட்சியாளர்களை விடுவித்தனர். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளின் நினைவாக ஆண்டுதோறும் பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2016ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது தீவிரவாதி ஒருவன் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதில் 87பேர் உயிரிழந்தனர். நானூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் கடந்த இரண்டாண்டுகளாகக் கொண்டாட்டம் களைகட்டவில்லை. இந்த ஆண்டு பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாளையொட்டி நைஸ் நகரில் நடைபெற்ற வாணவேடிக்கை கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.