கோபிச்செட்டிபாளையத்தில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

365

கோபிச்செட்டிபாளையத்தில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநரை, பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 80 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தின் ஓட்டுநர் சிவக்குமார், ஹெல்மெட் அணிந்தபடி ஓட்டிச் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.