சீட் பெல்ட், ஹெல்மெட் விவகாரங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல்..!

424

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சீட் பெல்ட், ஹெல்மெட் விவகாரங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது கருத்து கூறிய நீதிபதிகள், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர். அரசின் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று சுட்டிக் காட்டிய நீதிபதிகள்,இதனை நீதிபதி மன்றத்தின் உத்தரவாக மட்டும் பார்க்க கூடாது எனவும் மாறாக சட்டத்தில் உள்ளதை தான் நீதிமன்றம் அமல்படுத்த கூறுவதாகவும் விளக்கம் அளித்தனர். அதேசமயம் காரில் செல்லும் உயர் அதிகாரிகளும் சீட் பெல்ட் அணிவதில்லை என அதிருப்தி தெரிவித்துடன், இந்த வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.