கட்டாய ஹெல்மெட் அணியும் உத்தரவை ஏன் அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

211

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக தெரிவித்தது.
இதனை பலமுறை தாங்களே நேரில் பார்த்ததாக கூறிய நீதிபதிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.