நியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..!

293

நியூயார்க்கின் அடுக்கு மாடி கட்டடம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தால், அமெரிக்காவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் பகுதியில் 51 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு தற்போது கன மழை பெய்து வருகிறது. இதனால் தெளிவான வானிலை காணப்படாத நிலையில், ஹெலிகாப்டர் ஒன்று திடீரென அந்த கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் அதன் விமானி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், ஹெலிகாப்டர் அவசரகால தரையிறக்கம் செய்ய முயன்றுள்ளதாகவும், ஏதோ ஒரு காரணத்திற்காக கட்டடத்தின் மேற்கூரையில் இறங்க முற்பட்டு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.