கேரள மாநிலத்தில் 3 நாட்களுக்குப் பலத்த மழை பெய்யும்..!

192

கேரளத்தில் இன்றுமுதல் மூன்று நாட்களுக்குப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் கேரளப் பேரிடர் மேலாண்மை ஆணையம் காசர்கோடு, இடுக்கி, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல் கடலோரக் கர்நாடகம், தெற்கு உட்புறக் கர்நாடகப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.