அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

281

அமெரிக்காவில் கொட்டித் தீர்த்த கனமழையில், வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் இடைவிடாது கனமழை பெய்தது. இந்த மழையால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால் டெக்சர்ஸ் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டுள்ளது.