தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

76

தென்மேற்கு திசையில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு திசையில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலத்தில் 4 செ.மீட்டர் மழையும், திருவாரூர் மாவட்டம் அதிராமப்பட்டினத்தில் 3 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.