மதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை..!

392

மதுரை மாநகர் பகுதிகளுக்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கன மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாநகர் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்த போதும், நகர் பகுதியில் பல மாதங்களாக மழை பெய்ய வில்லை. இந்த நிலையில், இன்று பிற்பகல் மதியம் 2 மணிக்கு மேல் மிதமான சாரல் மழை தூவியது. சற்று நேரத்தில் பொது மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு கனமழையாக மாறியது. நீண்ட நாட்களுக்கு மழை பெய்ததால், அப்பகுதி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.