சென்னையில் பல இடங்களில் கனமழை..!

208

சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுக்க தற்போது மழை பெய்து வருகிறது. முக்கியமாக வேலூரில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு வேலூரில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழைகிறது. அதேபோல் தற்போது டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இன்று முழுக்க இப்படி கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதிகாலை 3 மணிக்கு துவங்கிய மழை தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்படி கிண்டி, அண்ணாசாலை, தி நகர், மேடவாக்கம், குரோம்பேட்டை, போரூர், ராயபுரம், ராமாபுரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் வடபழனி, பெசன்ட் நகர், அடையார், அண்ணா நகர் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. 2 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு சாலைகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.