தீவிரவாதச் செயல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்… ஆசியாவின் இதயம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்….

413

அனைத்து விதமான தீவிரவாத செயல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று, ஆசியாவின் இதயம் மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ஆசியாவின் இதயம் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை, அமைதியை ஏற்படுத்துவதில் சர்வதேச சமூகம் முனைப்புடன் இருப்பதை உறுதி செய்யவே அனைவரும் கூடி இருப்பதாக கூறினார். பயங்கரவாதத்தை அழிப்பதற்கு வலிமையாக ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், பயங்கரவாதிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து விதமான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து நாடுகளும் ஓத்துழைக்க வேண்டும் என்று, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, பொருட்கள் கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும், தீவிரவாதிகளுகு புகலிடம் கொடுப்பதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.