மன்னார்குடி அருகே பயிர் கடன் வாங்கச் சென்ற விவசாயி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

242

மன்னார்குடி அருகே பயிர் கடன் வாங்கச் சென்ற விவசாயி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி அருகே பாளையக்கோட்டையை சேர்ந்த விவசாயி அசோகன். இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்து வந்தார். இந்தநிலையில், தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்ததையடுத்து, நகைகளை வைத்து பணம் வாங்க திருமக்கோட்டையில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். வரிசையில் நின்று கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அசோகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.