வீடியோக்களை பார்த்து பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை…

216

வீடியோக்களை பார்த்து பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது…

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக்கொள்வது மட்டுமே தாய் மற்றும் சேயின் நலத்துக்கு பாதுகாப்பானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளுக்கு பேறுகால கவனிப்பு வழங்க எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள், செவிலிய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை,
வீடியோ, திரைப்படங்களைப் பார்த்து பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளது.இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக 102 அல்லது 104 அல்லது பொது சுகாதாரத் துறையின் 94443 40496, 044 – 24350496, 24334811 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.