45 நாட்களாக சீறும் கியூலி எரிமலை..!

480

கியூலி எரிமலை 45 நாட்களாக தொடர்ந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருவதால், ஹவாய் தீவு அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு சொந்தமான ஹவாய் தீவில் எரிமலைகள் அதிகம் இருக்கின்றன. மிகவும் அழகான தீவான ஹவாய்க்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகை தருகிறார்கள். இந்நிலையில், கடந்த மாதம் 3ம் தேதி வெடித்து சிதறிய கியூலி எரிமலை தொடர்ந்து நெருப்பு குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால், சுற்று வட்டாரத்தில் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைு வரை உள்ள வீடுகள், மரங்கள், அலுவலகங்கள் தீயின் பிடியில் சிக்கி நாசமடைந்தன. 45 நாட்களாக நெருப்பு குழம்பு வெளியேறி வருவதால், ஹவாய் தீவு அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.