29 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாய நிலங்கள் அளவீடு..!

129

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் அரூரில் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வே பணிகள் நடைபெற்றன.

தருமபுரி மாவட்டம் அரூரில் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆறு நாட்களாக மேல்செங்கப்பாடி, ஆண்டியூர், தீர்த்தமலை, லிங்காபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் சர்வே பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 29 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாய நிலங்கள் அளவீடு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து பணிகள் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.