ஹிர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை … பொதுக்கூட்ட மேடையில் பரபரப்பு

236

குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ஹிர்திக் படேலை பொதுக்கூட்ட மேடையில் பளார் என ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் படேல் சமூக மக்களின் இடஒதுக்கீடு போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய ஹிர்திக் படேல், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். இந்த நிலையில், சுரேந்திரநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் ஹிர்திக் படேல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மேடையேறிச் சென்ற நபர் ஒருவர், யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென ஹிர்திக் படேலை அறைந்து, தாக்குதல் நடத்தினார். இதனைக்கண்ட ஹிர்திக் ஆதரவாளர்கள் அந்த நபரை பிடித்து, தர்மஅடி கொடுத்து, அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.