ஜனாதிபதி விருது வாங்கிய மாணவி பலாத்காரம்..!

584

சிபிஎஸ்இ தேர்வில் முதலாவதாக வந்து, குடியரசு தலைவர் விருது பெற்ற கல்லூரி மாணவியை ஹரியானாவில் சிலர் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயதுடைய மாணவி, கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்போது, 3 நபர்களால் வழிமறிக்கப்பட்டு, காரில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, ஒதுக்குப்புறமான இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்போது, அருகில் இருந்த வயலில் இருந்த சிலரும், மாணவியை 3 பேருடன் சேர்ந்து, மாறிமாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, சுயநினைவை இழந்த அந்த மாணவியைப் பேருந்து நிலையத்தில் தள்ளிவிட்டு, 3 பேரும் தப்பியோடிவிட்டனர். பின்னர், இந்தக் கொடூர சம்பவம் குறித்து, அந்த மாணவியின் தந்தை அளித்த புகாரை ஏற்க, உள்ளுர் போலீஸார் மறுத்துவிட்டனர். இதனையடுத்து, குருகிராம் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.