இங்கிலாந்து அரச குடும்பத்தில் சலசலப்பு காரணமாக, இளவரசர் தனிக்குடித்தனம் !!

136

இங்கிலாந்து அரச குடும்பத்தில் உருவாகியுள்ள சலசலப்பு காரணமாக, இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் தனிக்குடித்தனம் செல்கின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் இளவரசர்களான வில்லியம்-ஹாரி ஆகிய இருவரும், கென்சிங்டன் அரண்மனையில் அவரவர் மனைவிகளுடன் ஒன்றாக வசித்து வந்தனர். இன்னும் இரண்டு மாதங்களில் ஹாரியின் மனைவி மேகன் மார்க்கெல்லுக்கு குழந்தை பிறக்க உள்ளது. இந்நிலையில், அரண்மனைக்கு வந்ததில் இருந்தே இளவரசர்களின் மனைவிகள் 2 பேருக்கும் இடையே ஒத்துப்போகவில்லை. இதனால், தனித்தனியாக வாழ வேண்டும் என்று இளவரசர்கள் வில்லியமும்-ஹாரியும் முடிவு செய்திருந்தனர். இதற்கு ராணி எலிசபெத் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் விண்ட்சோரில் உள்ள இல்லத்திற்கு ஹாரியும், அவரது மனைவி மேகனும் தனிக்குடித்தனம் செல்கின்றனர்.