சென்னையில் போட்டி இல்லாதது வேதனை அளிக்கிறது – ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கருத்து ..!

542

பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்ந்து மீண்டும் சென்னையில் போட்டி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் சென்னையில் போட்டியில்லை என்பதால் மிகுந்த வருத்தம் அடைந்ததுள்ளதாக தெரிவித்துள்ளார். பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும் நேசமும் துளியும் குறையாது என்றும் தங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.