ஹால் டிக்கெட் கிழிக்கப்பட்டதால் விபரீதம் | 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

721

ஹால் டிக்கெட் கிழிக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியாதென தவித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் தமிழரசி. இவர் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில் சக மாணவர் இருவரால் தமிழரசியின் ஹால் டிக்கெட் மற்றும் புத்தகம் கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தமிழரசி வீட்டிற்கு சென்றுள்ளார். இனி தேர்வு எழுத முடியாதென நினைத்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தமிழரசியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, ஹால்டிக்கெட்டை கிழித்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.