சிங்கப்பூரில் முதல் பெண் அதிபராக ஹலிமா யாகோப் போட்டியின்றி தேர்வு!

307

சிங்கப்பூரில் முதல் பெண் அதிபராக ஹலிமா யாகோப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய அதிபர் டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. சிங்கப்பூரின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தேர்தலில் போட்டியிட போவதாக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாகோப் அறிவித்திருந்தார். ஹலிமா யாகோப்பை எதிர்த்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதால், ஹலிமா யாகோப் ஒருமனதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சிங்கப்பூரின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை ஹலிமா பெற்றுள்ளார்.