முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஹபிபுல்லா பாஷாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் ..!

452

முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஹபிபுல்லா பாஷா உடல்நலக் குறைவால் காலமானது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றியதை குறிப்பிட்டுள்ள அவர், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சிறப்பு வழக்கறிஞராகவும், ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்ல பண்பாளரும், பழகுவதற்கு இனிமையானவருமான அவர், பல கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட பெருமைக்குரியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹபிபுல்லா பாஷாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.