தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை பா.ஜ.க நிரப்பும் : எச்.ராஜா

235

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் பா.ஜ.கவின் ஸ்தாபகர் தின நிகழ்ச்சி பண்ணையார் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்தால், அரசியலில் வெற்றிடம் காணப்படுவதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வெற்றிடத்தை பா.ஜ.க நிரப்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எச்.ராஜா, வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்கும் எண்ணத்தில் இருக்கும் டி.டி.வி.தினகரனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.