எச் 1 பி விசா கொள்கைகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்கா திட்டவட்டம்..!

1740

இந்தியாவுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்திய பின்னரும், எச் 1 பி விசா கொள்கைகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் எச்1 பி விசா தொடர்பான புதிய கொள்கைகள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளின்படி, விண்ணப்பங்களில் பிழை இருக்கக்கூடாது, அதிக ஆவணங்கள் தேவை, பணியில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான விதிகள் அமலுக்கு வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவதை அடுத்து, மத்திய வெளியுறவுத்துறையிடம் முறையிடப்பட்டது.

இதனையடுத்து, புதிய விதிகளை தளர்த்த வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், அமெரிக்க உள்துறை அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தியாவின் வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இந்த பேச்சு வார்த்தையில் எந்த பலனும் இல்லை. இதனைத்தொடர்ந்து, எச் 1 பி 1 விசா கொள்கைகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.