குட்கா ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1075

குட்கா ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதற்கான ஆதாரங்கள் குட்கா விற்பனையாளர் மாதவ ராவ்க்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த குட்கா ஊழல் புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆரம்பம் முதலே சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு அழுத்தமாக வாதிட்டது. இந்நிலையில், சிபிஐ விசாரணை நடத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.