குட்கா ஊழல் தொடர்பாக, மாதவராவ் உள்ளிட்ட 5 பேரின் காவல் நீட்டிப்பு..!

305

குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக குட்கா கிடங்கின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து, மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ போலீஸார், அவர்கனை செங்குன்றம் குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, பின்னர் காவல் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி திருநீலபிரசாத் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாதவ ராவ் உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.