குட்கா ஊழல் வழக்கில் மேலும் 6 பேர் ஆஜர்..!

303

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக மேலும் 6 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ள குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் , மற்றும் அவரது கூட்டாளிகள் உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் உட்பட 6 பேர் ஏற்கனேவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்துதற்காக காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் தொடர்பாக மாதவராவின் 4 மேனேஜர்கள் மற்றும் 2 உறவினர்கள் என 6 பேர் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் குட்கா ஊழல் தொடர்பு குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் . மேலும் அவர்களின் வங்கி கணக்குகள், பண பரிமாற்றம் ஆகியவை குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர்.