ராயபுரத்தில் டன் கணக்கில் குட்கா பதுக்கல் | ரூ 30 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

109

சென்னை ராயபுரத்தில் வீட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராயபுரத்தில் குமரேசன் என்பவர் தனது வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில் போலீசார் குமரேசன் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு 30 லட்சம் ரூபாயாகும். இச்சம்பவத்தை அடுத்து குட்கா வியாபாரி குமரேசன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.