பான் மசாலா விற்பனையாளர்களிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள்.

224

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா ஆகியவற்றை விற்பனை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியலை, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கடிதமாக அனுப்பியுள்ளார்.
குட்கா, பான்மசாலா ஆகியவற்றை பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் ஏற்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. இதையடுத்து இவற்றை தடை செய்யக்கோரி சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழகத்தில் குட்கா, பான்மசாலா ஆகியவை தடை செய்யப்படும் என அறிவித்தார். இந்த நிலையில், இவற்றின் உற்பத்தியை நிறுத்த சில காலம் கெடு விதிக்கப்பட்டது. ஆனால், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா, பான்மசாலாவை தமிழகத்தில் அனுமதித்துள்ளதாக தமிழக தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தில், லஞ்சம் பெற்ற அதிகாரிகளை பெயர்களை பட்டியலிட்டுள்ள ஜார்ஜ், இதுகுறித்து சி.பி.ஐ விசாரனை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.