குருமூர்த்தி சொல்வதெல்லாம் நடக்க அவர் என்ன தேவ தூதரா? – அமைச்சர் ஜெயக்குமார்..!

507

குருமூர்த்தி சொல்வதெல்லாம் நடக்க அவர் என்ன தேவ தூதரா என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியல்வாதிகள் நாவை அடக்கி பேச வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளதை நினைவுப்படுத்தினார். ரஜினி- பா.ஜ.க குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ஒட்டு மொத்த தமிழக மக்களின் கருத்து ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பதே என்று தெரிவித்தார். குருமூர்த்தி சொல்வதெல்லாம் நடக்க அவர் என்ன தேவதூதரா என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்று கூறினார்.