உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்று உலக சாதனை..!

334

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியின் சுஹல் நகரில் உலகக்கோப்பை ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு எட்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. இந்தப்போட்டியில் மொத்தமாக 243.7 புள்ளிகள் பெற்று சவுரவ் சவுத்ரி புதிய உலக சாதனை படைத்ததுடன், தங்கப் பதக்கமும் வென்றார்.

இதே பிரிவில், கொரியாவின் லிம் ஹோஜின் வெள்ளிப் பதக்கமும், சினாவின் வாங் ஜிஹாவ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். உலகக்கோப்பை தொடரில் இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என 14 பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.