முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாஹ் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு காரில் மர்ம நபர் அத்துமீறி நுழைய முயற்சி..!

291

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாஹ் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு காரில் அத்துமீறி நுழைய முயன்றவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா ஜும்முவின் பட்டிண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது காரில் பரூக் அப்துல்லா வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றார். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபரை சுட்டுக்கொலை செய்தனர்.

இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் குப்தா தலைமையிலான போலீசார், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட நபர் யார்? அவரது பின்னணி என்ன? போன்ற விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.