தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் ஒரு நபர் ஆணையம் இன்று முதல் 3 நாட்களுக்கு விசாரணை ….!

317

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, பிரமாணபத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் ஒரு நபர் ஆணையம் இன்று முதல் 3 நாட்களுக்கு விசாரணை நடத்துகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டகார்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டது. இதனையடுத்து, துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
இந்தநிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, பிரமாணபத்திரம் தாக்கல் செய்தவர்களிடம், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், இன்று முதல் 3 நாட்களுக்கு விசாரணை நடத்துகிறார்.