அமெரிக்காவில் நேற்று 7 மணி நேரத்தில் பத்து இடங்களில் நடைபெற்ற வெவ்வேறு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் நேற்று 7 மணி நேரங்களில் சுமார் பத்து துப்பாக்கிச் சூடுகள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு சில இடங்களில் இலக்கு வைத்தும், சில இடங்களில் கும்பல் மோதலாகவும் நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிகாகோ நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நகரில் வன்முறை இரவு என்ற தலைப்பில் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.