ஆந்திராவிலிருந்து மணல் கடத்தி வந்த 12 லாரிகள் பறிமுதல்..!

112

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் பொங்கல் திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் தனியார் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர். மண் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்தனர். உழவர் திருநாளின் மகத்துவத்தை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். கோலாகலத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி செயலர், முதல்வர், பேராசிரியர் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெருவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவிலையில் தோரணம் கட்டி கரும்பு கூடாரம் அமைத்து பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடினர்.

சிறுவர், சிறுமிகள் வேட்டி மற்றும் பாவாடை சட்டையில் பங்கேற்று, நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினார். இந்த விழாவில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் புத்தாடை உடுத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர். அனைத்து துறைகளின் பேராசியர்களும், வெளிநாட்டு மாணவ, மாணவிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதேபோல் நர்சிங் பயிற்சி மாணவிகளும், சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்களும் சுகாதார பொங்கலை கொண்டாடினர்.