50 ஆண்டு ஒரு கட்சியை நடத்துவது சாதாரண விஷயம் அல்ல – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

357

திமுக தலைவர் கருணாநிதியின் புகழ்வணக்க கூட்டத்தில் ராகுல்காந்திக்கு பதிலாக தாம் பங்கேற்க வந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்ளிடம் பேசியஅவர் , கருணாநிதி இந்தியாவின் மகன் என்றும் 50 ஆண்டுகளாக ஒர கட்சியை நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றும் கூறினார். கருணாநிதியின் புகழ்வணக்க கூட்டத்தில் அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சி அடைகிறது என தெரிவித்தார். இதே போன்று நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது , கருணாநிதி மொழிமீது அதிகம் பற்று கொண்டவர் என்றும் , அவரது வழியில் ஸ்டாலின் நல்ல ஆட்சி அமைப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் கூறினார்.

ஸ்டாலின் மூலம் தமிழக மக்கள் கருணாநிதியை காண்பார்கள் என்றும் பரூக் அப்துல்லா தெரிவித்தார். கருணாநிதி புகழ் வணக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் எச்சூரி , திமுக தலைவர் கருணாநிதி பல்துறை வித்தகர் என புகழாரம் சூட்டினார்.