காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று லக்னோவில் அறிவிப்போம் – குலாம்நபி ஆசாத்

102

சமாஜ்வாதி, பகுஜன்சமாதி கூட்டணி கைவிட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று லக்னோவில் அறிவிப்போம் என்று குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்த கட்சிகள் திடீரென தனிக் கூட்டணியை உருவாக்கி இருப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் ராஜ்பப்பர், மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குலாம் நபி ஆசாத், இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று லக்னோவில் அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டடார்.