குஜராத்தில் சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான…

240

குஜராத்தில் சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் சென்ற வேனை ஓட்டுநர் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் திடீரென கவிழ்ந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இருந்து குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேனை அதி வேகமாக இயக்கியதே விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.