குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்‍கள்,சொந்த ஊர் புறப்பட்டனர்!

334

பெங்களூருவில் உள்ள சொகுசுவிடுதியில் தங்க வைக்‍கப்பட்டிருந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்‍கள், மாநிலங்களவை தேர்தலையொட்டி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அக்‍கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைந்ததால், காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியடைந்தது. கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களைத் தக்‍க வைத்துக்‍கொள்ளும் நோக்‍கத்துடன், அவர்களை, கர்நாடக மாநிலத்திற்கு கட்சி மேலிடம் அனுப்பி அனுப்பி வைத்தது. இதனையடுத்து 40-க்‍கும் மேற்பட்ட குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்‍கள்,கடந்த சில நாட்களாக பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தங்க வைக்‍கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், குஜராத் மாநிலங்களவை தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறுவதால், பெங்களூரு சொகுசு விடுதியில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்‍கள் இன்று பேருந்து மூலம் குஜராத் புறப்பட்டு சென்றனர்