குஜராத் மாநிலத்தில் 3 ஆயிரத்து 550 பழுதான மின்னணு வாக்கு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது..!

320

குஜராத் மாநிலத்தில் 3 ஆயிரத்து 550 பழுதான மின்னணு வாக்கு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 70 ஆயிரத்து 182 வாக்காளர் இயந்திரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 46 ஆயிரம் வாக்காளர் எந்திரங்கள், குஜராத்துக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை சோதனையிட்ட தேர்தல் ஆணையம், 3 ஆயிரத்து 550 வாக்காளர் இயந்திரங்கள் பழுதானவை என கண்டு பிடித்துள்ளது. பல இயந்திரங்களில் சென்சார்கள் வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் பழுதான வாக்காளர் இயந்திரங்களை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.