குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இசை கச்சேரி நிகழ்ச்சியில், காவலர் ஒருவர் பாடகர் மீது ரூபாய் நோட்டுக்களை வீசிய காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில், பிரபல குஜராத்தி மொழி பாடகர் ஜிட்டா ராப்பானி என்பவரின் இசைக்கச்சேரி நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற காவலர் ஒருவர், அவரது பாடலுக்கு மயங்கி, பண மழையை பொழிந்தார். அதேபோல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற மற்றொரு இசை நிகழ்ச்சியில், மோடியின் முகமூடியை அணிந்த சிலர், பாடகர் மீது லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தனர். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.