ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்பு..!

198

குஜராத்தில் இருந்து ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டதை போன்று, மற்ற சிலைகளும் விரைவில் மீட்கப்படும் என்று ஐஜி. பொன். மாணிக்கவேல் உறுதி அளித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனுக்கும் அவரது மனைவி உலகமாதேவிக்கும் ஐம்பொன் சிலைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டன. இந்த சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன நிலையில், குஜராத்தில் உள்ள சாராபாய் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசின் தொடர் முயற்சியால், சுமார் 150 ரூபாய் கோடி மதிப்புள்ள இரண்டு சிலைகளையும் குஜராத் அரசு ஒப்படைத்தது. இந்தநிலையில், ரெயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.